Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , மு.ப. 09:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொழும்பு-01, ஜனாதிபதி மாவத்தை, ரேணுகா கட்டடம், இலக்கம்-41 என்ற முகவரியில் இயங்கிவந்த ஜனாதிபதி நிதியம், இன்று (18) முதல் இடமாற்றப்பட்டுள்ளதென, ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அதற்கமைய, கொழும்பு-10, டி.ஆர்.விஜயவர்தன மாவத்தை, லேக்ஹவுஸ் கட்டடம், மூன்றாம் மாடி, இலக்கம் 35, என்ற முகவரியில் இந்த நிதியம் இயங்கும்.
விரிவான, வினைத்திறனான மக்கள் சேவையை வழங்குவதற்காகவும் சேவைகளை பெற்றுக்கொள்வதற்காக வருகைதரும் மக்களுக்கு வசதிகளை ஏற்படுத்தி தரும் நோக்குடனும் ஜனாதிபதி நிதியத்தை புதிய இடத்தில் நிறுவுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக இன்று 18ஆம் திகதி தமது சேவைகளைப் பெற்றுக்கொள்ள வருகை தரும் மக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்கள் தொடர்பிலும் ஜனாதிபதி நிதியம், தனது வருத்தங்களைத் தெரிவித்துகொண்டுள்ளது.
ஜனாதிபதி நிதியத்தின் சேவை வழங்கும் நடவடிக்கைகள் 2019.01.21ஆம் திகதி முதல் வழமைபோல் இடம்பெறும் என்பதுடன், நிதியத்துடன் தொடர்புகொள்ளக்கூடிய தொலைபேசி இலக்கங்களில் மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.
அதற்கமைய 011-2331245, 011-2431610 அல்லது 011-2382316 என்ற இலக்கங்களினூடாக ஜனாதிபதி நிதியத்துடன் தொடர்புகொள்ள முடியும் என்றும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
32 minute ago
43 minute ago
52 minute ago