2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி, பிரதமரை தனித்தனியாக சந்திக்க தீர்மானம்

Editorial   / 2020 பெப்ரவரி 11 , பி.ப. 03:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை தனித்தனியாக சந்தித்து கலந்துரையாட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் கடிதம் ஊடாக கோரிக்கை முன்வைத்துள்ளதாக  கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் பேராசிரியர் ரோஹண லக்ஷமன் பியதாச தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு உருவாக்க தீர்மானித்துள்ள கூட்டணி தொடர்பில் விரிவாக கலந்துரையாட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

கூட்டணியின் பெயர், இலட்சினை உள்ளிட்ட பிரதான விடயங்கள் தொடர்பில் இதன்போது, கலந்துரையாடவுள்ளதாகவும் ரோஹண லக்ஷமன் பியதாச சுட்டிக்காட்டியுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .