2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதிக்கு எதிராக அடிப்படை உரிமை மனு

Editorial   / 2018 நவம்பர் 29 , மு.ப. 08:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரதமர் பதவியிலிருந்து ரணில் விக்கிரமசிங்கவை நீக்குவதாகவும், புதிய பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவை நியமிப்பதாகவும் தெரிவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட நடவடிக்கைகளுக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுவொன்று நேற்று (28) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நாலந்தா பல்கலைக்கழகக் கல்லூரியைச் சேர்ந்த பிரதான தேரரான தம்பர அமில தேரரே, இந்த மனுவை, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.

பிரதமர் பதவியிலிருந்து ரணிலை நீக்கியமை, ஜனாதிபதியின் அதிகாரங்களுக்கு அப்பாற்பட்டது எனத் தெரிவிக்கும் மனுதாரர், அந்நடவடிக்கை, அரசமைப்பை வேண்டுமென்றே மீறிய நடவடிக்கையாகும் எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். புதிய பிரதமராக மஹிந்தவை நியமித்தமையும், அவ்வாறே எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இவற்றுக்கு மத்தியில், மஹிந்தவுக்கு, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லை என்பதையும் சுட்டிக்காட்டும் மனுதாரர், நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நிறைவேற்றப்பட்ட பின்னர், அவற்றை ஏற்கவில்லை என, ஜனாதிபதி சிறிசேன மீதும் மஹிந்த எம்.பி மீதும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கடந்த வாரத்தில், ஜனாதிபதியின் நடவடிக்கைகளுக்கு எதிராக, கொழும்பில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டோரில், அமிர தேரரும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .