2025 ஜூலை 09, புதன்கிழமை

‘ஜனாதிபதியின் கண்களை கஜு போதையே மறைத்தது’

Editorial   / 2018 நவம்பர் 12 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கஜூவின் போதை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கண்களை மறைத்துவிட்டது என்று தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி, அதனால்தான், 2015ஆம் ஆண்டு மக்கள் வழங்கிய ஆணையை, அப்பட்டமாக எத்தி உதைத்து அப்படியே கீழே தள்ளிவிட்டார் என்றும் குற்றங்சாட்டியது.

போதை கண்களை மறைத்தமையால், இலங்கை ஜனநாயகக் சோஷலிஸ குடியரசு என்பது மாற்றமடைந்து, சர்வாதிகார ஆட்சி நடத்தப்படும் குடியரசு என்ற அடையாளத்தை நாடு பெற்றுக்கொண்டுள்ளது என்றும் அக்கட்சி தெரிவித்துள்ளது. 

அலரிமாளிகையில் நேற்று (11) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைத்த போதே, முன்னாள் எம்.பியான, எஸ்.எம்.மரிக்கார் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

இதேவேளை, அரசியல் களத்தில் புதிய முகங்களின் வரவே விரும்பப்படுகின்றன என்று தெரிவித்த அவர், ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை பதவி, சஜித் பிரேமதாஸவுக்கு வழங்கப்படவேண்டும் என்பதே, கட்சியிலுள்ள பலரின் விருப்பமாகும் என்றும் தெரிவித்தார்.  

நாட்டில் நிலவிய சர்வாதிகார ஆட்சி முறைமைக்கு முடிவுகட்டி, சட்டம் மற்றும் நீதியை நிலைநாட்டவும் கொள்ளையர்களை பிடிக்கவுமே மைத்திரியின் ஆட்சியை மக்கள் கொண்டுவந்தார்கள் என்று தெரிவித்த மரிக்கார், அனைத்தையும் இன்று மைத்திரி பொய்ப்பித்துள்ளார் என்றார். 

ஸ்ரீ லங்கன், விமானத்தில் கஜூ சாப்பிட்ட போதையில் ஜனாதிபதியால் மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை முற்றிலும் பைத்தியக்காரத் தனமானது. இதனால்தான் நாம் உயர்நீதிமன்றத்தை நாட முடிவு செய்துள்ளோம் என்றார்

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .