Nirosh / 2020 டிசெம்பர் 26 , பி.ப. 12:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்புக்கு எதிராக, வெள்ளைத்துணி கட்டும் கவனயீர்ப்பு போராட்டமொன்று வவுனியா மன்னார் பிரதான வீதி பட்டாணிச்சூர் முஸ்லிம் மகாவித்தியாலயத்துக்கு முன்பாக இன்று(26) முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா மாவட்ட அனைத்து பள்ளிவாசல்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தப் போராட்டத்தில், சுனாமி பேரவையில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அடக்கம் என்பதே உலகநியதி, எரிப்போம் என்பதே உன் வியாதி, எரிக்காதே எரிக்காதே ஜனாஸாக்களை எரிக்காதே, மண்ணைவிட மருத்துவம் எதுவுண்டு, அடக்கம் செய்ய அனுமதி தா, போன்ற வாசகங்களை ஏந்தியும், கோசங்களை எழுப்பியும் ஜனாஸா எரிப்புக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இப்போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், சமத் மௌலவி, வவுனியா நகரசபை உறுப்பினர்களான ரசூல் லறீப், அப்பதுல் பாரி, பாயிஸ் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மௌலவிமார்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
2 hours ago
3 hours ago