2026 மே 02, சனிக்கிழமை

ஜனாஸா விவகாரம்: இன்று முக்கிய தீர்மானம்

Gavitha   / 2020 டிசெம்பர் 10 , பி.ப. 12:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களைத் தகனம் செய்யும் விடயம் தொடர்பான பேச்சுவார்த்தையொன்று, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் எம்.பிக்களுக்கும் இடையில், இன்று வியாழக்கிழமை (10) இடம்பெறவுள்ளது. நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில், இன்று மாலை மூன்று மணிக்கு, இந்தப் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால், இதில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் சுகாதாரத் துறை அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர் என்று, பிரதமர் அலுவலகப் பிரதானி யோஷித்த ராஜபக்‌ஷ தெரிவித்தார். பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, ஏற்கெனவே ஜனாஸாக்களை அடக்கம் செய்வது தொடர்பாக ஆராய்வதற்கான குழுவொன்றை அமைத்துள்ள நிலையில், அந்தக் குழுவின் பரிந்துரைகள் பற்றி, இன்று மாலை இடம்பெறவுள்ள பேச்சுவார்த்தையின் போது அவதானம் செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .