2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஜீவன் - இந்திய எம்.பி சஷி தரூர் சந்திப்பு

Freelancer   / 2025 ஓகஸ்ட் 17 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற உறுப்பினரும், இ.தொ.கா பொதுச் செயலாளருமான ஜீவன் தொண்டமான், இலங்கைக்கு வருகை தந்துள்ள இந்திய தேசிய காங்கிரஸின் முக்கிய தலைவரும்,  பாராளுமன்ற உறுப்பினருமான கலாநிதி சஷி தரூரை நேற்று (16) கொழும்பில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இதன் போது, தற்போது இந்திய வெளியுறவுக் குழுவின் தலைவராகப் பணியாற்றி வரும் சஷி தரூரின் கருத்துக்கள் மற்றும் அரசியல் அனுபவங்கள் குறித்த கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ள ஒரு அரிய வாய்ப்பாக அமைந்தது என பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

மேலும், சிறந்த அரசியல்வாதி, சிந்தனையாளர், எழுத்தாளர் எனப் பல பரிமாணங்களில் விளங்கும் சஷி தரூரின் பணி எப்போதும் ஊக்கமளிப்பதாகும் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X