2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

ஜீன் என்சல் இலங்கையை வந்தடைந்தார்

Editorial   / 2020 ஜனவரி 31 , மு.ப. 09:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய நாடுகளுள் மிகவும் சிறிய நாடான, லக்ஸம்பேர்க்கின் வெளிவிவகார அமைச்சர் ஜீன் என்சல் போர்ன் இலங்கைக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று இரவு கட்டுநாயக்க விமானநிலையத்தை வந்தடைந்தார்.

நால்வர் அடங்கிய குழுவினருடன் வருகைத் தந்துள்ள இவர், புதுடில்லியிலிருந்து நேற்று இரவு 10.15 மணியளவில் ஸ்ரீ லங்கன் விமான நிறுவனத்தின் யூ.எல். 196 விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இவரை வரவேற்பதற்காக இலங்கை வெ ளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத் ஆரியசிங்க உள்ளிட்டவர் விமான நிலையத்துக்குச் சென்றிருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .