Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Editorial / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 11:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பான நீதிமன்ற விசாரணைகளால் வெளிநாட்டு பயணத் தடைக்கு உள்ளாகியுள்ள, பெர்பச்சுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் பணிப்பாளர் அர்ஜுன் அலோசியஸின் தந்தையும் பெர்பச்சுவல் ட்சரீஸ் நிறுவனத்தின் தலைவருமான ஜெப்ரி அலோசியஸுக்கு சிங்கப்பூர் செல்வதற்கான அனுமதியை வழங்குமாறு நீதிமன்றிடம் விடுத்த கோரிக்கையை கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜயரத்ன இன்று நிராகரித்துள்ளார்.
வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதற்கான அனுமதியை அலோசியஸ் கோரியிருந்த போதும், அதை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் இன்மையால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அவர் வைத்திய சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்வதை உறுதிப்படுத்துவது தொடர்பான ஆவணத்தை இம்மாதம் 25ஆம் திகதி உறுதிப்படுத்துமாறு நீதவான் ஜெப்ரி அலோசியஸின் சட்டத்தரணியிடம் அறிவுறுத்தியுள்ளார்.
எனினும் இம்மாதம் 13ஆம் திகதி தொடக்கம் 20ஆம் திகதி வரை ஜெப்ரி அலோசியஸ் இந்தியா செல்வவதற்கான அனுமதி நீதவானால் வழங்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
8 hours ago