2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

டெங்கு: கடந்த வருட மார்ச்சை விட இவ்வருட மார்ச்சில் அதிகம்

Princiya Dixci   / 2017 ஏப்ரல் 09 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனனி ஞானசேகரன்

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் மாத்திரம், நாடளாவிய ரீதியில் 11,547 பேர் டெங்குக் காய்ச்சால் பீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் மார்ச் மாதம் 2,696 பேர் டெங்குக் காய்ச்சால் பீடிக்கப்பட்டிருந்ததாகவும் ஆனால், இவ்வருடம் இத்தொகை 8,851 பேரால் அதிகரித்துள்ளதாகவும், தொற்றுநோய் விஞ்ஞானப் பகுதி சுட்டிக்காட்டியுள்ளது.

இதற்கமைய 1,647 பேர் கொழும்பு மாநகரத்துக்குட்பட்ட பகுதிகளிலும் 5,259 பேர் கொழும்பை அண்டிய பகுதிகளிலும் என 6,906 பேர், கொழும்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவில், இவ்வாண்டில் டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், கம்பஹா – 3,853, களுத்துறை – 1,773, இரத்தினபுரி – 1,187 , காலி – 1,649 , குருநாகல் – 1,225 , யாழ்ப்பாணம் – 1,884 , புத்தளம் - 526 , மட்டக்களப்பு – 1,339, அம்பாறை - 160  பேர் என, பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பிரிவுகளில், டெங்குக் காய்ச்சலினால் பீடிக்கப்பட்டுள்ளனர்.

நுளம்புகள் பரவும் வகையில் காணப்படும் சுற்றுச்சூழல்களை, சுத்தமாக வைத்திருக்குமாறு சுகாதார அமைச்சு, மக்களை வலியுறுத்தியுள்ளது.

மேலும், மூன்று நாட்கள் காய்ச்சல் தொடர்ந்தும் நீடிக்குமாயின், வைத்தியரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவ்வமைச்சு அறிவுறுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X