Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Thipaan / 2016 ஒக்டோபர் 17 , மு.ப. 07:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளார்.
இது தொடர்பான இராஜினாமா கடிதத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு அவர் அனுப்பி வைத்துள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர், முப்படையின் முன்னாள் தளபதிகளிடம் விசாரணை நடத்தப்போவதாக, தன்னிடம் அறிவிக்காமலேயே, மேற்படி ஆணைக்குழு நடவடிக்கை எடுத்தது என்று, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கடந்த சில தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.
ஜனாதிபதியின் அந்தக் கருத்துக்கும், மேற்படி இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம், தனது பதவியை இராஜினாமா செய்வதற்கும் இடையே, தொடர்பு இருப்பதாக, அரசியல் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகமாக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்ட தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 11ஆம் திகதியன்று, தமது கடமைகளைப் பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
19 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
25 minute ago
2 hours ago
2 hours ago