Freelancer / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 09:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான டிங்கர் என அழைக்கப்படும் ஸ்ரீதரன் நெரஞ்சனை 24 மணி நேரம் தடுத்து வைத்து விசாரிக்க கொழும்பு குற்றப்பிரிவுக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
புளூமெண்டலைச் சேர்ந்த 36 வயதான சந்தேகநபர் நேற்று (1) காலை டுபாயில் இருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டார்.
சந்தேகநபர் திட்டமிட்ட குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளியான கொச்சிக்கடை ஷிரான் என அழைக்கப்படும் பழனி ஷிரான் க்ளோரியனின் உதவியாளர் என கண்டறியப்பட்டுள்ளது.
2024ஆம் ஆண்டில் கிரேண்ட்பாஸிலுள்ள மஹவத்த பொதுமயானத்திற்கு அருகில் முச்சக்கர வண்டியில் இருந்த நபரை துப்பாக்கிச்சூடு நடத்தி கொலை செய்த சம்பவத்திற்கு சந்தேகநபர்கள் வந்த காரின் சாரதியாக செயற்பட்டமை, பேலியகொடை ஸ்ரீ ஞானரத்ன மாவத்தையில் ஒருவரை சுட்டுக் கொலை செய்து மற்றும் மற்றொருவருக்கு காயமேற்படுத்தியமை, சந்தேகநபர்களுக்கு துப்பாக்கிகளை பரிமாற்றியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சந்தேகநபருக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ளன. R
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago