Freelancer / 2025 டிசெம்பர் 26 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிசம்பர் மாதம் 29ஆம் திகதி முதல் நாட்டின் ஊடாக கிழக்கு திசையிலான அலை அலையான காற்று ஓட்டம் வலுவடையவுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் விசேட வானிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது..
இதன் காரணமாக, வரும் நாட்களில் நாட்டின் பல பகுதிகளில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
விசேடமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும் என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் எதிர்வரும் வானிலை கணிப்புகள் மற்றும் அறிவிப்புகள் குறித்து அவதானத்துடன் இருக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .