Janu / 2026 பெப்ரவரி 18 , மு.ப. 10:39 - 0 - {{hitsCtrl.values.hits}}
மன்னார், ஓலைத்தொடுவாய் கடற்கரை பகுதியில் சட்ட விரோதமாக டைனமைட் வெடிபொருள் பாவித்து மீன் பிடியில் ஈடுபட்ட ஒருவர் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளால் செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
ஓலைத்தொடுவாய் பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த நபரிடம் இருந்து டைனமைட் வெடிபொருள் பாவித்து பிடிக்கப்பட்ட சுமார் 450 கிலோ கிராம் மீன் கைப்பற்றப்பட்டுள்ளது.
கைப்பற்றப்பட்ட மீன், வாகனம் ஒன்று, மற்றும் சந்தேக நபரை மன்னார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த அதிகாரிகள் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
எஸ்.ஆர்.லெம்பேட்


1 hours ago
02 Mar 2026
02 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
02 Mar 2026
02 Mar 2026