Freelancer / 2021 ஜூலை 24 , பி.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் முதல் இரண்டு தங்கப் பதக்கங்களை, சீன விளையாட்டு வீரர்கள் கியான் யங் மற்றும் ஜிஹுய் ஹூ ஆகியோர் வென்று சாதனை படைத்தனர்.
10 மீற்றர் ஏயார் ரைஃபிள் துப்பாக்கி சுடும் போட்டியில் கியான் யங் தங்கப் பதக்கத்தை வென்றதுடன், இதுவே டோக்கியோ ஒலிம்பிக் 2021இல் வெல்லப்பட்ட முதல் தங்கப் பதக்கமாகும்.
பெண்கள் பளுதூக்கல் 49 கிலோ கிராம் பிரிவில் சீனாவின் ஜிஹுய் ஹூ தங்கம் வென்றார். அந்தப் போட்டியில் இரண்டாம் இடம் பெற்ற மீராபாய் சானு, இந்தியாவுக்காக வெள்ளிப் பதக்கம் வென்றுள்ளார்.
சீனா இரண்டு தங்கப் பதக்கங்களையும் ஈரான், தென் கொரியா ஆகிய நாடுகள் தலா ஒரு தங்கப் பதக்கத்தையும் இதுவரை வென்றுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
26 minute ago
36 minute ago
51 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
36 minute ago
51 minute ago