2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தாக்குதலில் இளைஞன் மரணம்; நால்வர் காயம்

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 16 , மு.ப. 10:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

காலி, இரத்கம பகுதியில் வீடொன்றினுள் புகுந்து இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் இளைஞன் உயிரிழந்துள்ளதுடன், மேலும் நால்வர் காயமடைந்துள்ளதாக இரத்கம பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று செவ்வாய்க்கிழமை (15) இரவு 9.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவத்தில் இரத்கம பகுதியைச் சேர்ந்த 24 வயதான துசித வசந்த கனகரத்ன என்பவரே உயிரிழந்துள்ளார். 

உயிரிழந்த இளைஞனின் பெற்றோர், மனைவி மற்றும் சகோதரி ஆகியோரே இதன்போது காயமடைந்துள்ளதாகவும் காயமடைந்த நால்வரும் கராப்பிட்டிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் இரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம், பிரேத பரிசோதனையின் பொருட்டு கராப்பிட்டிய வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் ஐந்து பேர் கொண்ட குழுவினரே இத்தாக்குதலை நடத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளதாகவும் இரத்கம பொலிஸார் தெரிவித்தனர்.

முன்விரோதத்தின் காரணமாகவே இத்தாக்குதல் இடம்பெற்றுள்ளதாகத் தெரிவித்த இரத்கம பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .