2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தேங்காய் விலை விரைவில் குறையும்

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 06 , மு.ப. 09:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தேங்காய் விலை, எதிர்வரும் இரண்டு மாதங்களில் குறைவடையுமென, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் கபில் யஹாந்தாவல தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களாக நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக, தேய்காயின் விலை அதிகரித்தது.

இந்நிலையில், இறக்குமதி  செய்யப்படும் பாம்ஒயில் மீது விதிக்கப்பட்டுள்ள வரித்தொகையைக் குறைப்பதற்கு, பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சர் நவீன் திஸாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளார்.

இதனூடாக, தேங்காயின் விலையைக் கட்டுப்படுத்த முடியுமென, தெங்கு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர், நம்பிக்கை வெளியிட்டார்.

நாட்டின் தெங்கு உற்பத்தியில், 40 சதவீதமான உற்பத்தி வீண் விரயம் செய்யப்படுகிறது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X