2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

தேசிய டெங்கு ஒழிப்பு வாரம்: மார்ச் 29இல் ஆரம்பம்

Princiya Dixci   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 09:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாடளாவிய ரீதியில் பரவி வரும் டெங்கு நோய்களை முற்றாக ஒழிப்பதற்கான தேசிய டெங்கு ஒழிப்பு வாரம், எதிர்வரும் மார்ச் மாதம் 29ஆம் திகதி தொடக்கம் ஏப்ரல் மாதம் 05ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

டெங்கு நோயின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதனால் சுகாதார அமைச்சினால் மீண்டும் இந்த டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த தேசிய டெங்கு ஒழிப்பு வாரத்தினுள் சிரமதான நடவடிக்கைகளும் விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவுள்ளன. 

இத்திட்டத்துக்கு முப்படை வீரர்களின் உதவிகள் பெறப்படவுள்ளதுடன், பொதுமக்களின் ஒத்துழைப்புக்களையும் எதிர்பார்ப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில் டெங்கு நோயாளர்கள் பலர் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .