Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஓகஸ்ட் 24 , மு.ப. 03:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரபல றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் காணாமற்போன விவகாரத்தில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால், தன்னைக் கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வாறு கைது செய்யப்பட்டால், தன்னை முன்பிணையில் விடுவிக்குமாறும் கோரி, முன்னாள் சட்டவைத்திய அதிகாரி ஆனந்த சமரசேகரவினால் தாக்கல் செய்யப்பட்ட மனு, கொழும்பு மேலதிக நீதவான் சரணி ஆட்டிகல முன்னிலையில், நேற்றுச் செவ்வாய்க்கிழமை (23) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், குறித்த பிணை மனு தொடர்பில் விளக்கம் கோருவதற்காக, அம்மனுவில் பிரதிவாதியாகக் குறிப்பிடப்பட்டுள்ள குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் மரண விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரியை, எதிர்வரும் 30அம் திகதியன்று, நீதிமன்றத்துக்கு சமூகமளிக்குமாறு, நீதவானால், அழைப்பாணை விடுக்கப்பட்டது.
இந்த முன்பிணையின் மூலம், தனக்கும் வசீம் தாஜுதீனின் உடற்பாகங்கள் மாயமானதற்;கும் எவ்விதத் தொடர்பும் இல்லை எனவும், முன்னாள் சட்டவைத்திய அதிகாரியினால் குறிப்பிடப்பட்டுள்ளது.
5 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
11 minute ago
1 hours ago
2 hours ago