Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 நவம்பர் 14 , மு.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
நீதித்துறையைச் சேர்ந்தவர்களுக்கான வருடாந்த இடமாற்றத்தை நீதிச் சேவைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த இடமாற்றங்கள் யாவும், 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1ஆம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும்.
இவ்விடமாற்றத்துக்கு எதிரான கடிதத்தை எதிர்வரும் 25ஆம் திகதிக்கு முன்னர் அனுப்பி வைக்கலாம் என நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் பிரதிச் செயலாளர் ஆர்.பி.டி.பி.பி.ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்த, 70 பேர்களில் சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவர்களான, யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, யாழ். மாவட்ட நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார். கொழும்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதவான் டி.சரவணராஜா, அவிசாவளை மாவட்ட நீதவான் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அக்கறைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் என்.கந்தசாமி, பருத்தித் துறை நீதவான் நீதிமன்ற நீதவானாக இடமாற்றப்பட்டுள்ளார். பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.எச்.எம்.ஹம்சா, திருகோணமலை நீதவான் நீதிமன்ற நீதவானாக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.
திருகோணமலை மாவட்ட நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் எல்.ஜி.வி.பெர்ணான்டோ, பண்டாரவளை நீதவான் நீதிமன்ற நீதவானாக இடமாற்றப்பட்டுள்ளார்.
நீதிபதிகள் நிறுவன பயிலுனரான டபிள்யூ.எம்.எஸ்.எல்.தசநாயக்க, அம்பாறை மாவட்ட மேலதிக நீதிபதியாக இடமாற்றம் பெற்றுச் செல்லவுள்ளார். இதேவேளை, நீதிபதிகள் நிறுவன பயிலுனரான ஏ.பி.பவுல், அக்கரைப்பற்று மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார்.
இதேவேளை, கொழும்பு பிரதான நீதவான் ஜி.ஏ.பீ பிலப்பிட்டிய, அனுராதபுரம் மாவட்ட நீதிபதியாக இடமாற்றப்பட்டுள்ளார். அத்துடன், கல்கிஸை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். சஹாப்டீன், கொழும்பு மாவட்ட மேலதிக நீதவானாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இது இவ்வாறிருக்க, படுகொலைச்செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்கை, கல்கிஸை நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம். சஹாப்டீனே விசாரணைக்கு உட்படுத்தி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்
இதேவேளை, றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதின் படுகொலை சம்பந்தமான வழக்கை விசாரணை செய்யும், கொழும்பு மேலதிக நீதவான் நிஸாந்த பீரிஸ் காலி நீதவானாக இடமாற்றப்பட்டுள்ளார்.
4 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
6 hours ago