2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தெமட்டகொடை விவகாரம்: தாய், மகனுக்கு பிணை

George   / 2016 ஜனவரி 29 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெமட்டகொடையில், பாதசாரி கடவையை கடக்க முயன்ற தாயையும் மகளையும் தங்களுடைய காரில் முட்டிமோதி படுகொலைச்செய்ததாக கூறப்படும் அக்காரின் சாரதியாக செயற்பட்ட 15 வயதான மொஹமட் பாரூக் மற்றும் அவருடைய தாயான ஷகீலா பானு ஆகிய இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது.

தலா 10,000 ரூபாய் பணம் மற்றும் 10 இலட்சம் ரூபாய் சரீர பிணையில் இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

தெமட்டகொடை, பேஸ்லைன் வீதியில் புகையிரத விளையாட்டு மைதானத்துக்கு அருகில், சனிக்கிழமை (16) இரவு 8.50க்கு பாதசாரி கடவையை கடக்க முயன்ற கொழும்பு-08 பேஸ்லைன் வீதி, ரி20 தோட்டத்தை வசிப்பிடமாகக் கொண்ட 47 வயதான வீரசிங்ஹ ஆராச்சிலாகே அனுலா, அரவது 10 வயது மகளான சமாதி ரஷ்மிகா ஆகிய இருவரையும் தங்களுடைய காரில் முட்டிமோதி படுகொலைச் செய்ததாக அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.

இவ்விபத்தில், படுகாயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்தனர்.

இவ்விருவரும், இரவு நேர உணவினைப் பெற்றுக்கொள்வதற்கென  சாப்பாட்டுக் கடைக்குச் செல்வதற்காக பாதசாரி கடவையில் வீதியை கடந்துகொண்டிருந்த  கொண்டிருந்த போதே இவ்விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்துச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறுவனையும் சிறுவனின் தாயையும் கைது செய்த பொலிஸார், அவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் சிறுவனின் தாயே,  காரினைச் செலுத்திச் செல்வதற்கான அனுமதியினை வழங்கியதுடன், காரின் சாவியையும் வழங்கியிருந்தாகவும் தெரியவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X