2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தில்ருக்ஷி வந்து போன ஒரு மணித்தியாலத்தில் மைத்திரிக்கு மஹிந்தவிடமிருந்து அழைப்பு

George   / 2016 ஒக்டோபர் 19 , பி.ப. 12:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ.ஜோர்ஜ்

“ராஷபக்ஷ குடும்பத்தினர் டுபாய் நாட்டு வங்கியில் வைத்துள்ள கணக்கு விவரங்கள் தொடர்பில் அறிந்துகொள்ள அந்நாட்டு அரசரிடம் அனுமதி கேட்டு கடிதமொன்றை அனுப்புவதற்கு, பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்கிரமசிங்க, ஜனாதிபதியின் வீட்டுக்கு, ஒருநாள் வந்து கையெழுத்து வாங்கினார்.

ஒரு மணி நேரம் கழித்து மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதிக்கு அலைபேசி ஊடாக அழைத்து, எனக்கெதிராக கடிதமொன்றில் கையெழுத்திட்டீர்கள் தானே என்று கேட்டுள்ளார்”  என சுகாதார அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமான ராஜித்த சேனாரத்ன, தெரிவித்தார்.

அராசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .