2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

துஷ்பிரயோகம் செய்தால் முறையிடவும்

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 01:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பிலான முறைப்பாடுகளை முன்வைக்குமாறு பாரிய ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா, பொது மக்களிடம் கோரியுள்ளார்.

மேலும், 'பொது மக்களால் வழங்கப்படுகின்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் விசாரணைகளை தொடர ஆணைக்குழு தயாராக உள்ளது.

கடந்த ஐந்து மாதங்களில், முன்னாள் அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட அரச சொத்துக்களின் துஷ்பிரயோகம் குறித்த 900க்கும் அதிகமான முறைபாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அவற்றில் 250 முறைபாடுகள் குறித்த விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன' எனவும் அவர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .