2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

திஸ்ஸவை பார்க்க சிறைக்குச் சென்றார் மஹிந்த

George   / 2016 ஒக்டோபர் 20 , மு.ப. 11:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர், திஸ்ஸ அத்தநாயக்கவை சந்திப்பதற்காக, முன்னாள ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று வியாழக்கிழமை சென்றார்.

திஸ்ஸ அத்தநாயக்கவை பார்த்து நலம் விசாரித்த மஹிந்த, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில், “எந்த நேரத்தில் விடுதலை புலிகள் தாக்குதல் நடத்துவார்கள் என்று தெரியாததால் யுத்தக் காலத்தில் மக்கள் சரியாக உறங்கவில்லை.

எந்த நேரத்தில் எப்.சி.ஐ.டி, சி.ஐ.டியினர் வீட்டுக்குள் நுழைவார்கள் என்று தெரியாததால் இப்போதும் மக்கள் சரியாக உறங்குவதில்லை. இந்த அரசாங்கத்தின் ஒரே வேலை பழிவாங்குவது மட்டுமே” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .