2025 மே 02, வெள்ளிக்கிழமை

தங்காலையில் கைவிடப்பட்ட கார் மீட்பு

Editorial   / 2024 டிசெம்பர் 13 , மு.ப. 09:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தங்காலை வீரக்கெட்டிய வீதியில் பதிகம மரகஸ் சந்தியிலிருந்து திரவல வரையான பக்க வீதியில் வெறிச்சோடிய காணிக்கு அருகில் வியாழக்கிழமை (12) இரவு வெள்ளை நிற கார் கைவிடப்பட்ட நிலையில் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீரக்கெட்டிய பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் நுவான் விஜேதுங்கவிற்கு கிடைத்த தகவலுக்கு அமைய, உரிமையாளர் இல்லாத இந்த சந்தேகத்திற்கிடமான கார் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

குறித்த கார், கடவத்தை, விஜயபா மாவத்தை, மேல் கரகஹமுன, என்ற இடத்தில் வசிக்கும் 36 வயதுடைய பெண்ணின் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X