2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

திடீரென தீப்​பிடித்த பேருந்து: 20 பேர் உயிரிழப்பு

Freelancer   / 2025 ஒக்டோபர் 15 , மு.ப. 08:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

ராஜஸ்​​தானின் ஜெய்​சால்​மரிலிருந்து ஜோத்​பூர் நோக்கி செல்​லும் தனி​யார் பேருந்து நேற்று பிற்​பகல் 57 பயணி​களு​டன் புறப்​பட்டது. போர் அருங்​காட்​சி​யகம் அருகே தையத் கிராமத்​தில் சென்​றுகொண்​டிருந்​த​போது அந்​தப் பேருந்​தின் பின்புறத்திலிருந்து திடீரென தீப்​பற்றி பேருந்து முழு​வதும் மளமளவென பரவி​யது.

இதில், பயணி​கள் அவசர​மாக வெளி​யேற முடி​யாமல் சிக்​கிக் கொண்​ட​தால் 20 பேர் உடல் கருகி பரி​தாப​மாக உயி​ரிழந்​தனர். மேலும், 15 பயணி​கள் கடுமை​யான தீக்​கா​யங்​களு​டன் மருத்​து​வ​மனை​யில் சிகிச்சை பெற்று வரு​கின்​றனர்.

ராஜஸ்​தான் முதல்​வர் பஜன்​லால் சர்​மா, பேருந்து விபத்​தில் உயிரிழந்​தவர்​களுக்கு இரங்​கல் தெரி​வித்​துள்​ளதுடன், காயமடைந்​தவர்​களுக்கு உரிய சிகிச்​சை அளிக்​க அதி​காரி​களுக்​கு உத்தர​விட்​டார்​. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X