R.Maheshwary / 2021 மார்ச் 24 , மு.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜனவரி 29ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கொவிட் 19 நோய்க்கு எதிரான தடுப்பூசி ஏற்றல் பணிகளுக்கு, பொதுமக்கள் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் (22) மாத்திரம், 8,500 பேருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதென்று தெரிவித்த அப்பிரிவு, இதுவரையில் சுமார் 8 இலட்சத்து 40 ஆயிரம் பேருக்குத் தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதென்றும் தெரிவித்துள்ளது.
தடுப்பூசி ஏற்றல் நிலையங்களில் சிற்சில குழப்பநிலைகள் ஏற்படுவதாகவும் இதனால், தடுப்பூசி ஏற்றும் பணிகளில் தாமதங்கள் ஏற்படுவதாகவும் தெரிவித்துள்ள தொற்றுநோய் தடுப்புப் பிரிவு, இவ்வாறான நிலைமைகளைத் தவிர்க்க, பொதுமக்கள் தங்களுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென்று குறிப்பிட்டுள்ளது.
அஸ்ட்ராசெனெக்கா கொவிஷீல்ட் தடுப்பூசியே, தற்போது இலங்கையர்களுக்கு ஏற்றப்பட்டு வருவதாகவும் மேல் மாகாணத்துக்கு வெளியே பல பிரதேசங்களிலும் இந்தத் தடுப்பூசி ஏற்றல் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தொற்றுநோய் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
27 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago