2024 ஏப்ரல் 19, வெள்ளிக்கிழமை

’தடுப்பூசி மையங்களுக்கு படையெடுக்காதீர்கள்’

Freelancer   / 2021 ஓகஸ்ட் 01 , பி.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

அஸ்ட்ராஸெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸை வழங்கும் திட்டம் இன்றுமுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தடுப்பூசி மையங்களுக்குப் படையெடுத்து தேவையற்ற நெரிசலை உண்டாக்க வேண்டாம் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி, மக்களை வலியுறுத்தியுள்ளார்.

தடுப்பூசி போடுவதற்கு மக்களுக்கு போதுமான நேரம் இருப்பதாகவும், எனவே, தடுப்பூசி மையங்களில் நீண்ட வரிசைகளைத் தவிர்க்குமாறு மக்களைக் கேட்டுக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

“அஸ்ட்ராஸெனகாவின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்கு மேல் மாகாணத்தில் ஒரு பெரிய கூட்டம் உள்ளது. முதல் டோஸைப் பெற்றவர்களுக்குத் தேவையான அளவு டோஸை நாங்கள் பெற்றுள்ளோம் ”என்று அவர் கூறினார்.

“இது நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட விடயமாக இருப்பினும், தடுப்பூசி மையங்களில் சுகாதார வழிகாட்டுதல்களைப் புறக்கணித்து மக்கள் பொறுப்பற்ற முறையில் செயல்பட்டால், நிலைமை மோசமாகிவிடும். மேல் மாகாணத்தில் உள்ள ஒவ்வொரு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தையும் உள்ளடக்கிய பல மையங்களை அமைக்கப்பட்டுள்ளன. எனவே, பொறுமையுடன் தடுப்பூசி போடுமாறு மக்களை கேட்டுக் கொள்கிறேன்” என்றும் தெரிவித்தார். 

“இந்த தடுப்பூசித் திட்டத்தை, மேல் மாகாணத்தில் உள்ள 20 க்கும் மேற்பட்ட மையங்களில் சுகாதார ஊழியர்கள் மற்றும் இராணுவத்துடன் இணைந்து 7 நாட்களுக்கு செயல்படுத்த சுகாதார அமைச்சு திட்டமிட்டுள்ளது. முறையான சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்த நோயிலிருந்து தங்களைக் காப்பாற்ற நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்களை நான் கேட்டுக்கொள்கிறேன், ”என்று அவர் மேலும் கூறினார்.

இதற்கிடையில், மீதமுள்ள மருந்துகள் கேகாலை மாவட்ட தடுப்பூசி திட்டத்திற்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அடுத்த வாரம் மேலும் 727,380 டோஸ் அஸ்ட்ராஸெனகா பெறப்படும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .