2026 மே 14, வியாழக்கிழமை

dd

‘ தடுப்பூசிகளை அரசியல்வாதிகள் சுருட்டிவிட்டனர்’

Editorial   / 2021 மே 29 , மு.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தடுப்பூசியை செலுத்துவதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படாமை காரணமாக, நம்பிக்கையுடன் காத்திருக்கும் சாதாரண மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை மேலும் தாமதடையுமெனத் தெரிவித்த ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதாண, அரசாங்கம் என்னதான் சமாளித்தாலும் இதுவரை 5 இலட்சத்து 15,000 தடுப்பூசிகளையே கொள்வனவு செய்துள்ளது என்றார்.

“ஒவ்வொரு நாடுகளிடமிருந்தும் அன்பளிப்பாகக் கிடைத்த தடுப்பூசிகளை
வழங்கும் நடவடிக்கை முற்றாக அரசியல்வாதிகளின் தேவைகளுக்கேற்ப
இடம்பெறுகின்றது” என்றார்.


கொழும்பில் நேற்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர்
மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
முன்னாள் சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க இந்த
விடயத்தை உரியமுறையில் முகாமைத்துவம் செய்துகொண்டு சென்றார்
எனத் தெரிவித்த அவர், அரசியல்வாதிகளுக்குத் தேவையான முறையில்
இந்த விடயம் இடம்பெறவில்லை என்ற பிரச்சினை அரசியல்வாதிகளுக்குக்
காணப்பட்டது. இதனால்தான் அனில் ஜாசிங்கவை ஓரமாக வைக்கும்
முடிவை எடுத்தனர் என்றார். 

அனில் ஜாசிங்கவை ஓரமாக்கிவிட்டு, இன்று அரசியல்வாதிகளுக்கான
சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொடுக்கும் சுகதார அதிகாரிகளை நியமிக்கும்
தேவைக்கமைய அதனை முன்னெடுக்கும் சந்தர்ப்பம் கிடைத்துள்ளது.
அனைத்து சுகாதார அதிகாரிகளும் அல்ல. ஆனால், ஒரு சில சுகாதார
அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தேவைக்கேற்ப ​செயற்படுகின்றமை
நன்றாக விளங்குகின்றது.

அனில் ஜாசிங்கவிடம் கூறி பி.சி.ஆர் அறிக்கையின் எண்ணிக்கையை
குறைக்க முடியாது. மரண அறிக்கை, நோயார்களின் சரியான
எண்ணிக்கையை மக்கள் அறிந்து கொள்ளவுள்ள உரிமையைத் தடுக்க

முடியாது. அதனால்தான் தற்போது சில சுகாதார அதிகாரிகளின்
தேவைக்கமைய செயற்படுவதாகவும் இது மொரட்டுவ நகர சபையின்
நடவடிக்கை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

எனவே, சுகாதார அதிகாரியாக இந்த நாட்டு மக்களைப் பாதுகாக்கக் கூடிய
அனில் ஜாசிங்க போன்ற அதிகாரிகளை மீண்டும் சேவையில்
இணைத்துக்கொள்ளுமாறும் கோரிக்கை விடுப்பதாகத் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .