Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
R.Maheshwary / 2022 ஓகஸ்ட் 14 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
கடந்த காலங்களில் இலங்கையில் தடை செய்யப்பட்ட 06 புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் மீதான தடையை நீக்க பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
அத்துடன் 316 தனிநபர்களுக்கு எதிரான தடையையும் இலங்கை நீக்கியுள்ளது.
ஐ.நா பாதுகாப்புச் சபையின் 1373 மாநாட்டின் கீழ், தற்போது கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்ட குறித்த ஆறு அமைப்புகளின் மீதான தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, அவுஸ்திரேலிய தமிழர் பேரவை - உலகத் தமிழர் பேரவை - உலக திராவிட ஒருங்கிணைப்புக் குழு - திராவிட ஈழ மக்கள் கூட்டமைப்பு - கனடியத் தமிழர் பேரவை மற்றும் பிரித்தானிய தமிழர் பேரவை ஆகிய அமைப்புகளுக்கான தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளது.
கடந்த காலங்களில் இந்த அமைப்புகளின் செயற்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளின் பரிந்துரைகளுக்கு அமைய ,கடந்த வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் தடை நீக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
முழுமையான விபரங்களுக்கு https://bit.ly/3AjzeLh
29 minute ago
31 minute ago
35 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
31 minute ago
35 minute ago
38 minute ago