2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

தந்தை செலுத்திய டிப்பர் மோதி குழந்தை உயிரிழப்பு

Freelancer   / 2025 ஏப்ரல் 19 , மு.ப. 06:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

வீட்டில் நின்ற டிப்பர் வாகனத்தைத் தந்தை செலுத்திய போது அதன் சில்லுக்குள் அகப்பட்டு ஒன்றரை வயது குழந்தை உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி - அம்பாள்குளம் பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5  மணியளவில் இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில், வி. டர்சிகா என்ற பெண் குழந்தையே உயிரிழந்துள்ளது.

டிப்பர் வாகனத்தின் பின்புறம் குழந்தை விளையாடிக் கொண்டிருந்த போது, அதனைக் கவனிக்காத தந்தை, டிப்பரைப் பின்னோக்கி நகர்த்தியுள்ளார். இதன்போது டிப்பர் சில்லுக்குள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே குழந்தை உயிரிழந்துள்ளது.

கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X