2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கத் தீர்மானம்

Thipaan   / 2015 டிசெம்பர் 20 , பி.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கெலும் பண்டார

இலங்கையில் தனியார் பல்கலைக்கழகங்களை ஊக்குவிக்கவும் இயன்றளவு பூரண சுதந்திரத்தையும் அரச பல்கலைக்கழகங்களுக்கு வழங்கவும் அரசாங்கம் தீர்மானித்துள்ளதெனஉயர்கல்வி அமைச்சர்லக்ஷமன் கிரியல்ல, நேற்று ஞாயிற்றுக்கிழமை(20) கூறினார்.

பல்கலைக்கழகத் துறையின் அபிவிருத்திக்கென வரவு-செலவு திட்டத்தல், அரசாங்கம் போதிய நிதியினை ஒதுக்கீடு செய்துள்ளதெனவும், உயர் கல்வித் துறையில் அபிவிருத்திக்கும் விரிவுபடுத்தலுக்கும் தனியார்த்; துறையின் பங்களிப்பை அரசாங்கம் ஊக்குவிக்கும் எனவும் அமைச்சர் கிரியல்ல கூறினார்.

க.பொ.த உயர்தரம் சித்தியடைந்தோரில் 20 சதவீதமானோர் மட்டுமே பல்கலைக்கழகம் செல்ல முடிகின்றது. உயர்கல்வித் துறையில் கூடுதல் வாய்ப்புக்கள் உருவாக்கப்படுமெனவும் அமைச்சர் கூறினார்.

'நாம், பல்கலைக்கழக விவகாரங்களில் தலையிட மாட்டோம். உபவேந்தர்கள் சுதந்திரமாக செயற்பட முடியும்'. என அவர் கூறினார். இலங்கை தமது வளாகங்களை அமைக்க பல வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாக அமைச்சர் கூறினார்.

முன்னைய அரசாங்கம் வெளிநாட்டுப் பல்கலைக்கழங்களுடன் இதுபோன்ற ஒப்பந்தங்களைச் செய்ய விரும்பியது, அப்போதைய உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, தனியார் பல்கலைக்கழகங்களை நிறுவ வகை செய்யும் சட்டங்களை கொண்டுவர முனைந்தார் எனவும் அவர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X