2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

‘ தனக்கு தொடர்பில்லை ‘

Editorial   / 2019 பெப்ரவரி 05 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளரான சார்ள்ஸ் அப்பதவியிலிருந்து நீக்கப்பட்டமைக்கும் தனக்கும் எவ்வித தொடர்பும் இல்லையென அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

அவரை பதவி நீக்கிய விடயத்தில் தன்னுடைய தலையீடு இல்லையென்பதுடன் அவரை பதவி நீக்கியமையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் தெரிவித்துள்ளார்.

சிங்கள ​வானொலி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சர் மங்கள சமரவீரவும் தவறானவர் அல்ல சிறந்த முடிவுகளையே எடுப்பார். பணிப்பாளர் குறித்த யாராவது ஏதாவது குற்றச்சாட்டு கடிதங்களை அமைச்சர் மங்களவுக்கு அனுப்பியிருக்கலாம். மங்கள இனவாதியாக செயற்படுபவர் அல்ல.

நான் எதிர்பார்க்கின்றேன் அமைச்சரவைக் கூட்டத்தின் பின்னர் அவரது பதவி நீக்க விடயத்தில் மாற்றங்கள் வரலாம் என்றும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .