Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2025 ஒக்டோபர் 06 , பி.ப. 03:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
மாணவர்களின் நலன் கருதியும், அதிகரித்து வரும் தொடர் கற்பித்தல் நடவடிக்கைகளினால் மாணவர்களின் உள நலத்தை பாதுகாக்கும் நோக்கிலும் தனியார் கல்வி நிறுவனங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்பட வேண்டும் என மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையினால் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் அறிவிப்பு விடுவிக்கபட்டிருந்தன.
பின்னர் கடந்த வாரம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை எல்லைக்குட்பட்ட சகல தனியார் கல்வி நிலையங்களும் ஞாயிற்றுக்கிழமைகளில் பூட்டப்பட்டன.
இதனிடையே மண்முனை தென் எருவில் பற்று தவிசாளருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய ஞாயிற்றுக்கிழமை(05.) அன்று மகிழூர் கிராமத்தில் கற்பித்தல் நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த தனியார் கல்வி நிலையம் ஒன்றிற்கு பிரதேச சபை தவிசாளர் நேரடியாகச் சென்று பார்வையிட்டிருந்தார்.
அதிகரித்து வரும் தொடர் கற்பித்தல் நடவடிக்கைகளினால் மாணவர்களின் உள நலத்தை பாதுகாக்கும் நோக்கில் தான் நாங்கள் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரம் தனியார் கல்வி நிலையங்களை மூடுமாறு கேட்டுக் கொண்டுள்ளோம். மாணவர்களுக்கு சிறந்த கல்வியை வழங்க வேண்டும். நாங்கள் கற்பித்தலுக்கு எதிரானவர்கள் அல்ல. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாத்திரமாவது மாணவர்கள் சுதந்திரமாக இருக்க வேண்டும், ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்கள் அறநெறிப் பாடசாலை க்குச் செல்ல வேண்டும், உறவினர்கள் வீடுகளுக்கு செல்ல வேண்டும், வாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாத்திரம் பிள்ளைகளை சுதந்திரமாக விட வேண்டும் என்பதற்காகவே நாம் இவ்வாறு தீர்மானித்துள்ளோம் என இதன்போது தவிசாளர் வினோராஜ் தெரிவித்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago