2025 ஜூலை 07, திங்கட்கிழமை

தனியார் பஸ்ஸில் 170 கி.கி கேரள கஞ்சாவுடன் மூவர் கைது

Editorial   / 2020 ஜனவரி 22 , பி.ப. 12:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் பஸ் ஒன்றில் மறைத்து வைத்து கொழும்புக்கு  கொண்டுவரப்பட்ட 170 கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புத்தளம் பாலாவி பகுதியில்  பொலிஸ் போதை ஒழிப்பு பிரிவினரால் இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம், கொடிகாமம் மற்றும் கிளிநொச்சி பகுதிகளை சேர்ந்தவர்களே கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கிடைக்கப்பெற்ற  தகவலொன்றை அடுத்து, கல்பிட்டியில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த குறித்த பஸ், பாலாவி முச்சந்தியில் நிறுத்தப்பட்டு சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.

புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .