Freelancer / 2022 டிசெம்பர் 17 , பி.ப. 02:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பெண் ஒருவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக, தற்போது வசிக்கும் வீட்டை விட்டு வெளியேறி ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடியேற சிட்னி நீதவான் நீதிமன்ற நீதிபதி கிளாரி பெர்னான் அனுமதி அளித்துள்ளார்.
தனுஷ்க குணதிலக்க நேற்று (16) நீதிமன்றத்தில் ஆஜராகிய போதே அவர் சார்பில் நீதவான் நீதிமன்றில் ஆஜரான சட்டத்தரணி இந்தக் கோரிக்கையை முன்வைத்தார்.
குணதிலக்கவுக்கு உதவ முன்வந்த ஒருவரின் வீட்டில் வசிப்பதால் குணதிலகாவை புதிய வீட்டிற்கு செல்ல அனுமதிக்குமாறும் சட்டத்தரணி நீதிமன்றில் கோரியுள்ளார்.
அந்தக் கோரிக்கையை பரிசீலித்த சிட்னி நீதவான் நீதிமன்றம், குணதிலக்கவை புதிய வீடொன்றில் குடியேற அனுமதித்துள்ளது.
இந்த வழக்கு ஜனவரி 12ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வருகிறது. R
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago