Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 15, வியாழக்கிழமை
Editorial / 2023 ஜூலை 17 , பி.ப. 01:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
நிதர்ஷன் வினோத்
யாழ்.அச்சுவேலி பொலிஸ் நிலையத்துக்கு அருகில் உள்ள காணியில் தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயன்ற நபரை பொலிஸார் காப்பாற்றியுள்ளனர்.
தன் மகள் தொடர்பில் அயல் வீட்டார் இழிவாக பேசியது தொடர்பாக பொலிஸார் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டதாக தெரிவித்து அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் உள்ள காணியில் தனக்கு தானே பெட்ரோலை ஊற்றி தன்னுயிரை மாய்த்துக்கொள்ள முயற்சித்துள்ளார்.
விரைந்து செயல்பட்ட பொலிஸார் குறித்த நபரை மடக்கிப்பிடித்து காப்பாற்றியுள்ளனர். ஆவரங்கால் - சர்வோதயா பகுதியை சேர்ந்த நபரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
கடந்த ஒரு வாரத்திற்கு முன் ஆவரங்கால் சர்வோதயா பகுதியில் 18 வயது இளைஞன் ஒருவன் அயல் வீட்டுப் பெண்ணை காதலித்து இருவரும் சுய விருப்பில் திருமணம் செய்ய சென்றுள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து பெண் வீட்டார் மேற்படி இளைஞனின் வீட்டுக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டு சொத்துக்களுக்கும் சேதம் ஏற்படுத்தியிருந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட இளைஞனின் வீட்டார் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய பெண்ணின் தந்தை மற்றும் பெரிய தந்தை கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தின் முற்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டனர். சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் 5 சந்தேகநபர்களை கைது செய்யவும் பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.
அதனடிப்படையில் குறித்த 5 சந்தேகநபர்களையும் இன்று பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவித்துள்ள நிலையில்,
தவறு செய்யாத தாம் ஏன் முன்னிலையாக வேண்டும்? தனது மகளை அவதூறாக பேசிய அயல் வீட்டார் மீது நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் கூறியே இவ்வாறு முயற்சித்துள்ளார்.
இந்த சம்பவத்தால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பரபரப்பான நிலையேற்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
16 minute ago
27 minute ago
33 minute ago