2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

தப்பிச் சென்றவர்கள் சரணடைய நாளை வரை வாய்ப்பு

George   / 2016 டிசெம்பர் 30 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்ற இராணவ வீரர்கள், சட்ட ரீதியில் விலகிச் செல்வதற்கு வாய்ப்பளிக்கும் பொது மன்னிப்புக் காலம் நாளைய தினத்துடன் நிறைவடைகின்றது.

இதேவேளை, இந்த பொது மன்னிப்புக் காலத்தில் சரணடையாத வீரர்களை கைதுசெய்ய நாடளாவிய ரீதியில் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவ பேச்சாளர் பிரி​கேடியர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இந்த மாதம் 1ஆம் திகதி முதல் நாளை 31ஆம் தினதி வரை பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டிருந்தது.

அன்றைய தினத்திலிருந்து நேற்று வரை, 31 இராணுவ அதிகாரிகளும் 7,416 இராணுவ சிப்பாய்களும் சரணடைந்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .