Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 நவம்பர் 08 , பி.ப. 04:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
வ.சக்தி
எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெற உள்ள பொதுத்தேர்தலில் தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் வெள்ளிக்கிழமை (08) தபால் மூல வாக்கினை பதிவு செய்து கொண்டார்.
2024 பொதுத் தேர்தலில் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டு இருந்தபோது அரசாங்க உத்தியோகத்தரான அ.கருணாகரன் அதற்கு விண்ணப்பித்திருந்தார்.
இருப்பினும் இறுதி கட்டத்தில் கருணாகரன், தமிழரசு கட்சியின் வேட்பாளராக களம் இறக்கப்பட்டார்.
தபால் மூல வாக்களிப்பில் இருந்து விலக்கிக் கொள்ளுமாறு அதன் பின்பு தேர்தல் திணைக்களத்தினால் அவரிடம் கேட்டுக் கொள்ளப்பட்ட போதிலும் அதற்கான சந்தர்ப்பம் அவருக்கு கிடைக்கவில்லை.
இந்நிலையில், தபால் மூல வாக்களிப்பிற்கான இறுதி தினத்தில் இலங்கை தமிழரசு கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் அ.கருணாகரன் (வெள்ளிக்கிழமை) தபால் மூல வாக்கினை மட்டக்களப்பு தேர்தல் அலுவலகத்தில் பதிவு செய்து கொண்டார்.
56 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
56 minute ago
1 hours ago