2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது

Princiya Dixci   / 2017 பெப்ரவரி 04 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜே.ஏ. ஜோர்ஜ்

கொழும்பு - காலி முகத்த்திடலில் நடைபெற்ற இலங்கையின் 69ஆவது இன்றை சுதந்திர தின நிகழ்வின் போது, தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

நிகழ்ச்சி ஆரம்பத்தில் சிங்கள மொழியிலும் நிகழ்ச்சியின் இறுதியில் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டுமென, பெரும்பான்மையினர் மத்தியில் ஏற்பட்ட பெரும் சர்ச்சை அடுத்து, கடந்த வருடம் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.

இதனையடுத்து, இம்முறை சுதந்திர தின நிகழ்விலும் தமிழ் மொழியிலும் தேசிய கீதம் இசைக்கப்படுமென பலராலும் எதிர்பார்க்கப்பட்டிருந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X