2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தமிழக முதலமைச்சராக சசிகலா தெரிவு: பன்னீர் செல்வம் இராஜினாமா

George   / 2017 பெப்ரவரி 05 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சசிகலா சட்டமன்ற குழுத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளதுடன், முதலமைச்சர் பன்னீர் செல்வம், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது.

சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலாவை ஒ.பன்னீர் செல்வம் முன்மொழிந்தார். அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டதால் சசிகலா முதலமைச்சர் ஆகிறார்.

சட்டமன்ற கட்சி தலைவராக சசிகலா தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளதால், விரைவில் அவர் தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்வார் என்று கூறப்படுகிறது

.

சட்டமன்ற குழுத் தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டு உள்ளநிலையில், அவரிடம் ஒ.பன்னீர் செல்வம், தனது இராஜினாமா கடிதத்தை கொடுத்துள்ளார்.

7ஆம் திகதி அல்லது 9ஆம் திகதி, முதலமைச்சராக சசிகலா பதவியேற்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளதுடன், அதிமுகவின் உத்தியோகப்பூர்வ டுவிட்டர் வலைத்தளத்தில், சசிகலா முதலமைச்சராகிறார் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X