2025 மே 06, செவ்வாய்க்கிழமை

தமிழ் தேசியவாத பாடல் பிரச்சாரம் குறித்து NPP விளக்கம்

Simrith   / 2025 மே 06 , பி.ப. 12:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசியவாதம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) உடன் நெருக்கமாக தொடர்புடைய தமிழ் மொழி பிரச்சாரப் பாடல்களை வடக்கு மற்றும் கிழக்கில் வெளியிடுவதை தேசிய மக்கள் சக்தி (NPP) மறுத்துள்ளது.

வடக்கு மற்றும் கிழக்கில் சில இளைஞர்களால் உருவாக்கப்பட்ட சில காணொளிகள் NPP யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரனின் முகநூலில் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக NPP பொதுச் செயலாளர் நிஹால் அபேசிங்க தெரிவித்தார்.

அந்த காணொளிகளுடன் NPP அல்லது MP இளங்குமரனுக்கு எந்த தொடர்பும் இல்லை என்று அவர் கூறினார்.

"இதுபோன்ற காணொளிகள் டக் (Tag) செய்யப்படுவதில் தேசிய மக்கள் சக்திக்கு எந்த பொறுப்பும் இல்லை. சில இளைஞர்கள் எம்பி இளங்குமரனின் முகநூலில், காணொளிகளை உருவாக்கி டக் செய்துள்ளனர்," என்று அவர் கூறினார்.

இந்த விஷயம் வார இறுதியில் சமூக ஊடகங்களில் கடுமையான விவாதத்தைத் தூண்டியது, தமிழ் தேசியவாதத்தையும் விடுதலைப் புலிகளையும் ஊக்குவிக்க வடக்கு மற்றும் கிழக்கில் NPP அதன் பிரச்சாரப் பாடலை ஏன் அனுமதித்தது என்று பாவனையாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X