2025 நவம்பர் 03, திங்கட்கிழமை

தமிழக மீனவர்கள் 35 பேர் கைது

Editorial   / 2025 நவம்பர் 03 , மு.ப. 10:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக தமிழகம் மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த 35 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. மீனவர்கள் சென்ற 3 விசைப்படகு மற்றும் ஒரு நாட்டுப் படகையும் பறிமுதல் செய்த கடற்படை, 35 பேரையும் யாழ்ப்பாணம் மீன்வளத் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கும் நிலையில், தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இப்படி இருக்கையில் மீண்டும் மீண்டும் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X