S.Renuka / 2026 மார்ச் 15 , பி.ப. 04:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் 234 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப் பதிவு நடைபெறும்; மே 4ஆம் திகதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று இன்று ஞாயிற்றுக்கிழமை (15) இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமை ஆணையர் ஞானேஷ்குமார் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளும் கட்சியான தி.மு.க. அரசின் பதவிக்காலம் மே மாதம் 10ஆம் திகதியுடன் நிறைவடைகிறது. இதேபோல், புதுச்சேரி (ஜூன் 15), மேற்கு வங்காளம் (மே 7), அசாம் (மே 20), கேரளா (மே 23) ஆகிய மாநிலங்களின் பதவிக்காலமும் முடிவடைகிறது.
எனவே, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் உள்பட 5 மாநிலங்களிலும் மொத்தம் உள்ள 824 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்து வருகிறது.
இந்த நிலையில், 5 மாநில சட்டசபை தேர்தல் திகதியை இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் இன்று டெல்லியில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் வெளியிட்டார்.
அதன்படி, 234 தொகுதிகளை கொண்ட தமிழக சட்டசபைக்கு ஏப்ரல் 23ஆம் திகதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடத்தப்படுகிறது. வேட்புமனு தாக்கல் மார்ச் 30ஆம் திகதி தொடங்குகிறது.
வேட்புமனு தாக்கல் ஏப்ரல் 06ஆம் திகதி முடிகிறது. வேட்பு மனு பரிசீலனை ஏப்ரல் 07ஆம் திகதி நடக்கிறது. வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு கடைசி நாள் ஏப்ரல் 09ஆம் திகதி ஆகும். ஏப்ரல் 23ஆம் திகதி வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெறுகிறது.
வாக்கு எண்ணிக்கை மே 4-ம்ந் தேதி நடைபெற்று முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன. அன்று காலை 10 மணி முதல் முன்னணி நிலவரமும், மாலை முதல் வெற்றி பெற்ற வேட்பாளர்கள் விவரமும் தெரியவரும். அன்று இரவே தமிழகத்தில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்து விடும்.
7 minute ago
23 minute ago
29 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
23 minute ago
29 minute ago
30 minute ago