2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

’தாயும் சேயும்’: இணையத்தில் விவாதத்தை ஏற்படுத்திய வீடியோ

Editorial   / 2026 ஏப்ரல் 10 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

  இலங்கையின் பிரபல சர்ச்சைக்குரிய மாடல் அழகியான பியூமி ஹன்சமாலி, தனது 19 வயது மகனை இடுப்பில் தூக்கி வைத்துக் கொஞ்சும் வீடியோவை வெளியிட்டு இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே கவர்ச்சியான புகைப்படங்கள் மற்றும் சர்ச்சைக்குரிய காணொளிகள் மூலம் கவனத்தை ஈர்த்து வரும் இவர், தற்போது தனது மகனுக்கு 19 வயதாகிவிட்டதைக் குறிப்பிட்டு, “நான் அவனைத் தூக்கி வைத்திருக்கும் கடைசித் தருணம் இதுவே” என்ற வாசகத்துடன் இந்த வீடியோவைப் பகிர்ந்துள்ளார்.

கணவரைப் பிரிந்து தனது மகனுடன் வசித்து வரும் பியூமி, அவ்வப்போது மகனுடன் இருக்கும் புகைப்படங்களைப் பகிர்வது வழக்கமென்றாலும், இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்த வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் பியூமி ஹன்சமாலியை மிகக் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். வயதுக்கு வந்த மகனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு, கவர்ச்சியான உடையில் இவ்வாறான வீடியோக்களை வெளியிடுவது ஒரு தாய்க்கு அழகல்ல என்றும், இது மகனின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் குவிகின்றன. குறிப்பாக, அவர் அணிந்திருந்த ஆடை மற்றும் வீடியோவின் பின்னணி ஆபாசமாக இருப்பதாகக் கூறி, “தாய்மைக்கே அவர் களங்கம் விளைவிக்கிறார்” எனப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அதே சமயம், இந்தப் பதிவிற்கு ஆதரவாகவும் சில குரல்கள் ஒலிக்கின்றன. “பெற்ற தாய் தனது மகனைத் தூக்குவதில் என்ன தவறு இருக்கிறது?” என்றும், அவர் உருக்கமாகப் பதிவிட்ட கருத்தைப் புரிந்து கொள்ளாமல் சிலர் தேவையற்ற விமர்சனங்களை முன்வைப்பதாகவும் அவரது ஆதரவாளர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

ஏற்கனவே நிதி மோசடிப் புகார்கள் மற்றும் '18+' உள்ளடக்க விவகாரங்களில் சிக்கிச் சர்ச்சைக்குள்ளான பியூமி ஹன்சமாலிக்கு, இந்தப் புதிய வீடியோ இணையத்தில் மீண்டும் ஒருமுறை ஆதரவு மற்றும் எதிர்ப்பு அலைகளை ஒரே நேரத்தில் உருவாக்கியுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .