Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 18 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறங்குவது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் இறுதித் தீர்மானம் எடுக்கவில்லை எனத் தெரிவித்துள்ள அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திசாநாயக்க, ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது முக்கியமில்லை எனவும் தெரிவித்தார்.
புஞ்சிபொரளையில் உள்ள சுதந்திர ஊடகக்கேந்திர நிலையத்தில் நேற்று (17) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கும்போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்ததோடு, அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் யார் என்பது தொடர்பில் குழப்பமடையத் தேவையில்லை எனவும் தெரிவித்தார்.
மேலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ, நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஆகியோர் கலந்தாலோசித்து அடுத்த ஜனாதிபதி வேட்பாளரைத் தீர்மானிப்பார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.
இதன்போது மேலும் தெரிவித்த அவர், ஜனாதிபதித் தேர்தல் கூட்டணித் தொடர்பில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவிக்கும் கருத்துகளால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன இணைந்து ஐ.தே.கவுக்கு எதிராக உருவாக்கவுள்ள பாரிய கூட்டணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையிலான கூட்டணி ஒன்றே உருவாகுமென, அக்கட்சியின் பொதுச்செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்திருப்பது, அவரது தனிப்பட்ட கருத்து எனவும், இதுபோன்ற கருத்துகளைத் தெரிவித்து, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஒன்றிணைவதில் பாதிப்பை ஏற்படுத்த வேண்டாம் எனவும் அவர் கேட்டுக்கொண்டார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையா அல்லது பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவையா அல்லது முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவையா ஜனாதிபதி வேட்பாளராகக் களமிறக்குவது என்பது முக்கியமில்லை என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
28 minute ago
39 minute ago
48 minute ago