Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 02 , மு.ப. 11:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழற்றதும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் (ஹெல்மட்) பயன்படுத்துவதற்கு, இவ்வருடம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளதென்று, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், இன்று அறிவித்தது.
அதனால், தலைக்கவசங்களைக் கொள்வனவு செய்யும் போது, அவதானமாகக் கொள்வனவு செய்யுமாறு, பொதுமக்களிடம், போக்குவரத்துப் பொலிஸ் பிரிவுத் தலைமையகம், அறிவுறை வழங்கியுள்ளது.
தற்போது இடம்பெறுகின்ற வாகன விபத்துகளில் மோட்டார் சைக்கிள் விபத்துகள் அதிகரித்துள்ளன.
தரக்குறைவான தலைக்கவசங்களை அணிவதினால், விபத்தின் போது தலையில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கே, தரம் குறைந்ததும் பாதுகாப்பற்றதுமான தலைக்கவசங்கள் உபயோகிப்பதைத் தடை செய்யத் திட்டமிட்டதாக, போக்குவரத்துப் பொலிஸ் பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் சேனக்க கமகே தெரிவித்தார்.
மோட்டார் சைக்கிளில் பயணம் செய்யம் போது, தலைக்கவசத்தினுள் வைத்து அலைபேசி பாவிப்பதையும் தடை செய்துள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago