2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தரமான தலைக்கவசம் ‘ஏப்ரல் 1 முதல் கட்டாயம்’

Kogilavani   / 2017 பெப்ரவரி 02 , மு.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

“எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி முதல், தரப்படுத்தப்பட்ட தலைக்கவசங்களையே மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பயன்படுத்த வேண்டும் என்பது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது” என, போக்குவரத்து மற்றும் சிவில் சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டீ சில்வா தெரிவித்தார்.   

இதற்கு உதவி வழங்குவதற்காக, நுகர்வோர் அதிகார சபையும் இலங்கை நியமங்கள் நிறுவனமும் முன்வந்துள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.   

நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெற்ற விபத்துகளில் பாதிக்கப்பட்டு, அங்கவீனமுற்ற மக்களுக்கான நிவாரணங்களை வழங்கும் நிகழ்வு, அமைச்சில் இடம்பெற்ற போதே, அவர் இதனைத் தெரிவித்தார்.   

அங்கு தொடர்ந்துரைத்த அமைச்சர், “விபத்தொன்றை ஏற்படுத்திய நபர் இனங்காணப்படவில்லையாயின், அந்த விபத்தினால் பாதிக்கப்பட்ட நபர், ஆதரவற்றவராகி விடுகின்றனார். இவ்வாறாக இனங்காணப்படாதவர்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, கடந்த 2008ஆம் ஆண்டு தொடக்கம், நிவாரணங்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன் பிரகாரம், 137 பேருக்கு 7.6 மில்லியன் ‌ரூபாயும் 165 குடும்பங்களுக்கு 11.5 மில்லியன் ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது” என்றார்.   

மேலும் இந்நிகழ்வில், 18 பேருக்கு 1.8 மில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதோடு, ஒரு குடும்பத்துக்கு 2.3 மில்லியன் ரூபாயும் வழங்கப்பட்டது.   

பாதுகாப்பு வலையமைப்புகள் தவறாக அமைந்துள்ளமையும் வீதியை நேர்த்தியான முறையில் பராமரிக்க முடியாமையுமே, வீதி விபத்துக்கான காரணம் என்று தெரிவித்த அமைச்சர், இருக்கைப் பட்டிகளை அணியாமல் வாகனம் செலுத்துதல், தரமற்ற தலைக்கவசங்களைப் பயன்படுத்துவதாலும், பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது என்றும் தெரிவித்தார்.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X