2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தலைக்கவசங்களுக்கு SLS தர சான்றிதழ்

Princiya Dixci   / 2016 நவம்பர் 09 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

மோட்டார் சைக்கிள்களுக்கான தலைக்கவசங்களுக்கு எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் பெறப்பட்டிருக்க வேண்டும் என்றும் இந்த நடைமுறை, கடந்த ஓகஸ்ட் மாதம் முதல் அமுலுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருந்த போதிலும், அச்சட்டம் இதுவரையில் அமுல்படுத்தப்படவில்லை என்று, நுகர்வோர் உரிமைகளைப் பாதுகாக்கும் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.  

2003, இல 9 நுகர்வோர் நடவடிக்கைகள் தொடர்பான அதிகார சட்டத்தின் 12 (2) பிரிவின் கீழ், நடைமுறைப்படுத்தப்படும், இந்த நாட்டுக்குள் விற்பனை செய்யப்படும் சகல தலைகவசங்களும் இந்த வருடத்தின் ஓகஸ்ட் 1ஆம் திகதியிலிருந்து எஸ்.எல்.எஸ் தரச் சான்றிதழ் பெறுவது கட்டாயம் என்று குறிப்பிடப்பட்டு, வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்ததாக, குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.  

இது தொடர்பாக, விநியோகஸ்தர்களை தயார்படுத்துவதற்காக, 2015ஆம் ஜுலை 16ஆம் திகதி, 1923/65 இலக்கத்தைக் கொண்ட வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டது. தலைக்கவசங்களை நாட்டுக்குள் விற்பனைச் செய்யும் மற்றும் உற்பத்திச் செய்யும் நிறுவனங்களுக்கு, இந்த அனுமதிச் சான்றிதழைப் பெற்றுக்கொள்வதற்கு ஒரு வருட கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகவும் அந்தச் சங்கம் தெரிவித்திருந்தது.  

இதன் காரணமாக, ஓகஸ்ட் மாதம் 1ஆம் திகதியில் இருந்து அமுல்படுத்தப்படவிருந்த குறித்தச் சட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்தி, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களை பாதுகாக்குமாறு, மோட்டார் சைக்களில் ஓட்டுநர்களை பாதுகாக்கும் அமைப்பும் மற்றும் நுகர்வோர் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பும், கோரிக்கை விடுத்துள்ளன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .