2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

தலைமைத்துவப் பயிற்சி இனி இல்லை

Gavitha   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 02:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

பல்கலைக்கழகத்துக்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களுக்கு வழங்கப்படும் 'நாயகத்வ புஹுணுவ' என அழைக்கப்படும்,  தலைமைத்துவ பயிற்சி, இவ்வருடத்திலிருந்து வழங்கப்பட மாட்டாது என பல்கலைக்கழக கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

பல்கலைக்கழகத்துக்கு புதிதாக தெரிவாகும் மாணவர்களின் தலைமைத்துவப் பண்பு மற்றும் மொழித் திறமைகளை விருத்தி செய்ய வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்படும் என அவர் கூறினார்.

பல்கலைக்கழக மாணவர்களுக்காக தலைமைத்துவப் பயிற்சியானது, 20 இராணுவ முகாம்களில் வழங்கப்பட்ட நிலையில் இந்த பயிற்சியின்போது, நோய் மற்றும் அசௌகரியங்களுக்கு மாணவர்கள் முகங்கொடுக்க நேரிட்டதாக கடந்த காலங்களில் முறையிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .